பிரித்து மேய்ந்த பிலிப்பைனிகள் (பிலிப்பைன்ஸ்)!

பார்க்க பவ்யமாய் குள்ளமாக இருந்தாலும் வித்தியாசமானவர்கள் பிலிப்பைன் நாட்டவர்கள். இவர்கள் இழுத்து இழுத்து பேசும் ஆங்கிலமும் அரபியும் தனி அழகு. சொகுசு விரும்பிகள். குறைந்த சம்பள வேலையாக இருந்தாலும்  தன் முதல் இருமாத சம்பளம் வாங்கியவுடன் அதில் கூலிங்கிளாஸ். வாக்மேன். பேண்ட். டீ சர்ட். சூ. உயர் ரக மொபைல் இப்படியாக தான் எந்த நிலையிலிருந்தாலும் பந்தா விரும்பிகளாகவே வாழவிரும்புகின்றனர். பெரும்பான்மையாக கார் மெக்கானிக், தொழிற்சாலை மற்றும் ஹவுஸ் டிரைவர்களாக பணியாற்றுகின்றனர். 

இவர்களின் உணவு பழக்கமும் வித்தியாசமானது. இதை பற்றிய சுவையான சம்பவம்:- சவூதி ஜிசான் கராஜ் பகுதியில் டயோட்டா கம்பெனியின் புது பிராஞ்ச் ஆரம்பிக்கப்பட்டது. அதில் பல புதிய பிலிப்பைனிகள் பணியமர்த்தப்பட்டனர். சில மாதங்களில் அப்பகுதிகளில் சுற்றி திரிந்த பூனைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் பூனைகளே கண்ணில் தென்படாத அளவுக்கு காணாமல் போயிருந்தது. உண்மை வெளிவந்தது. சில பிலிப்பைனிகள் பூனைகளை லாவகமாக பிடித்து சமையல் செய்து பிரித்து மேய்ந்திருக்கின்றனர். “இப்படி செய்யலாமா?” என ஒரு பிலிப்பைனியிடம் நான் கேட்டபோது அதற்கு வருத்தமாக அவர் சொன்ன பதில் “பூனைக்கறியை விட நாய்க்கறிதான் பெஸ்ட்..!,என்ன செய்ய நாய்தான் இங்கில்லையே” என்றார்.

மற்ற நாட்டினர் இவர்களிடம் நெருங்கி பழக தயங்குவார்கள் காரணம் கடுமையான முன்கோபம் உடையவர்கள் பிலிப்பைனிகள். உதாரணமாக நான் நேரில் கண்ட இரு நிகழ்வுகள்.

பரபரப்பு குறைந்த காலையும் மதியமும் இணையும் மந்தகாச நேரம். அப்போது டயோட்டா கார் கம்பெனியின் உள் அமைந்த என் பூஃபியாவில் (கேப்டரியா) டீ குடிக்க வந்த பிலிப்பைனியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவ்வேளை அங்கு நுழைந்த பங்காளி(பங்களாதேஷ் நாட்டவர்) நட்பு நோக்கில் பின்னால் இருந்து பிலிப்பைனியை வேகமாக தட்டி ஹாய் என்றார். இதுபிடிக்காத பிலிப்பைனி திரும்பிய அதே வேகத்தில் விட்டார் மூக்கில் ஒரு குத்து. நிலைகுலைந்து போனார் பங்காளி. அதுமட்டுமில்லாது அடுத்த அடி அடிப்பதற்கான தயார்நிலையில் கராத்தே ஸ்டெப் போட்டு புரூஸ்லீயை யாபகப்படுத்தினார் பிலிப்பைனி. என் மனதிலோ “ஆஹா இன்னிக்கு என் கடை என்ன பாடுபடபோகுதோ” என்ற பீதியில் அமைதியாய் நான். ஆனால் அடி வாங்கிய பங்காளி மூக்கில் கைவைத்து மூடியபடி அப்பாவியாய் முணகியபடியே சென்றுவிட்டார். 

ஒரு தெரு வளைவு. பிலிப்பைனி ஓட்டி வந்த கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சவூதி நாட்டவரின் காரை உரசிவிட்டது. நோ பார்க்கிங்கான அவ்விடத்தில் காரை நிறுத்திய சவூதி நாட்டவரின் மீதே தவறிருந்தது. எனினும் அங்கு வந்த சவூதிகாரன் பிலிப்பைனி டிரைவரை அடிக்க ஆரம்பித்தான். முதல் இரு அடி வரை “சாரி சார்” என கூறியபடி இருந்த பிலிப்பைனி மீது அடி தொடரவே கையை மடக்கி சவூதிக்காரன் வாயில் பிலிப்பைனி விட்ட குத்தில் சவூதிக்காரனின் ஒரு பல் உடைந்தது. இதை பார்த்து கொண்டிருந்த மற்ற சவூதிக்காரர்கள் பிலிப்பைனி மீது தவறில்லை என்பதால் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.

பிலிப்பைனிகள் தன் குடும்பத்தின் மீது அளவிடாத பாசம் கொண்டவர்கள். அதனாலோ என்னவோ சவூதியில் சட்டத்திற்கு புறம்பான செயல்களை பெரும்பான்மையாக செய்வதில்லை.மொத்தத்தில் விசித்திரம் மிக்கவர்கள் பிலிப்பைனிகள்.

(அடுத்த தொடர் பங்களாதேஷ நாட்டவர்களைப்பற்றி்)

ஆக்கம்:அதிரை உபயா (எ) உபயதுல்லாஹ் 

Advertisement

Close