இரத்தம் குடிக்கும் புத்தம்

எல்லைக் கோடுகள்
இருக்கும் வரைக்கும்
தொல்லைக் கேடுகள்
தொடரும் நண்பா!

ஹசீனா என்பது
அழகான பெயர் தான்
அடச் சீ நீயா என்று
அழைக்க வைத்தாள்
அகதிகளாய் கூட
அரவணைக்காதவள்!

பறவைகளாய்ப்
பறந்து போகலாம்
“பாஸ்போர்ட்” விதியால்
பாரில் அகதிகளின் கதியாம்!

இறைவன் தந்த 
இந்த நிலத்தில்
இருப்பவன்
இல்லாதவன்
இப்படி என்ன
இடர்பாடு?

அந்தக் கடலில்
அகதிகளின் கண்ணீர்
சிந்தச் சிந்த
சிவப்பாகும் தண்ணீர்!

காவியுடை தரித்த;
மனித மாமிசம் தின்னும்
பாவிகளின் புத்தம்
நாவில் வடிவது இரத்தம்!

அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Close