ரசிகர் கண்ணத்தில் பளார்! யூசுஃப் பதான் ஆவேசம்!

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யூசுப்பதான். பரோடாவை சேர்ந்த அவர் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வருகிறார். பரோடா– ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் விளையாடிய யூசுப்பதான் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது அவரை இளம் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்து மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் யூசுப்பதான் ஆத்திரம் அடைந்து அந்த ரசிகரை கன்னத்தில் அறைந்தார்.

அந்த ரசிகர் இதே மாதிரி பரோடா வீரர்கள் கேதர், அம்பதி ராயுடு ஆகியோரையும் கிண்டல் செய்து இருந்தார். ஒவ்வொரு வீரரை தகாத வார்த்தைகளால் பேசியதன் காரணமாகவே யூசுப்பதான் அந்த ரசிகரை கன்னத்தில் அறைந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்காக அந்த ரசிகரின் சகோதரர் யூசுப்பதானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

போட்டி நடுவர் இது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார். யூசுப்பதான் ரசிகர் கன்னத்தில் அறைந்தது வீரர்களின் நடத்தை வீதியை மீறிய செயல் ஆகும். அவர் மீது லெவல் 3 குற்றமாகும். முதல் முறை என்பதால் அவர் எச்சரிக்கையோடு தப்பினார். இதனால் அடுத்த போட்டியில் விளையாட அவருக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

Advertisement

Close