அதிரையில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு!(படங்கள் இணைப்பு)

இன்று எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணி நடத்தினர். இன்று காலை 8 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து  ,அரசு உயர்நிலை பள்ளி வரை அமைதி பேரணியாக சென்று திரும்பினார்.

இந்த பேரணியில் அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் அபூபக்கர், நகர துணைச்செயலாளர் முஹம்மது தமீம், நகர பாசறை செயலாளர் அஹ்மத் தாகிர் , வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், உதயகுமார், அபூதாஹிர், ஹாஜா பகுருதீன்,சிவக்குமார் மற்றும், கழக நிர்வாகிகள் , ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  

Advertisement

Close