மீண்டும் புத்துயிர் பெரும் மல்லிப்பட்டினம் மனோரா!

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் (பட்டுக்கோட்டையில் இருந்து 20கிமீ, பேராவூரணியில் இருந்து 15கிமீ, )  அதிரைக்கு அருகில் கிழக்கு  கடற்கரை சாலை அருகே அமைந்துள்ளது.

மாவீரன் நெப்போலியன் தோற்றதன் நினைவு சின்னமாக மன்னர் சரபோஜி ராஜனால் இந்த மனோரா அமைக்க பட்டுள்ளது. சுற்றுலா தலமான மனோராவில் அப்போதைய திமுக ஆட்சியில் அன்றைய கவர்னர் பாத்திமாபீவி தலைமையில்  3  நாட்கள் சலங்கைநாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் இங்கு தமிழக அரசு சார்பில் சலங்கைநாதம்  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி மிகவும் பாழடைந்த நிலையில் இருந்த மனோரா  சுற்றுலா தலம்  கடந்த 2 மாத காலமாக மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Close