அதிரையில் பொழிவிழந்து காணப்படும் WSC மைதானம் குறித்து TIYA வின் அறிக்கை!

17.12.2014 அன்று அதிரைநியூஸ் வலைதளத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் மேலத்தெரு மைதானம் என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் பதிவு செய்ததை நான் பார்த்தேன், எனது வேலை பழுவின் காரணத்தால் என்னால் உடன் பதில் கொடுக்க முடியவில்லை இந்த மைதான விஷயத்தில் மேலத்தெருவாசிகள் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இந்த மைதானம் செடிகளால் மண்டிக்காணப்படுவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பெரும் வருத்தமும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மைதான்.

அந்த வரிசையில் கடந்த 10 தினங்களுக்கு முன் இது விஷயமாக ஊரிலிருந்து காதர் என்கின்ற  சகோதரர் என்னை தொடர்பு கொண்டார் நான்  உடன் தாயக TIYA நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினேன் மழை விட்டு விட்டு பெய்ந்து கொண்டுள்ளதால் ஒன்றும் செய்ய முடியவில்லை மழை நின்றது விரைவில் அதை சரி செய்யலாமென்று கூறியுள்ளனர். எனவே, இது விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்திகொண்டுதான் உள்ளோம் என்ற தகவலை அறியத் தருகின்றோம்.
இன்ஷா அல்லாஹ்  மழை விட்ட ஒரு வார காலத்திற்குள்  இது விஷயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம்

படங்கள்: முஹம்மது சிராஜுத்தீன்

Advertisement

Close