கடல் போல் காட்சியளிக்கும் அதிரை கரிசல்மணி குளம்!

அதிரையில் நேற்று முந்தினம் பெய்த கன மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக நமதூர் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள கரிசல்மனி குளமும் முழுமையாக நிறைந்துள்ளது.

இடையில் குறைந்த மழை பொழிவாலும், குளத்திற்கு வரும் நீர்வரத்து குறைந்ததாலும் நிறைந்து காணப்பட்ட கரிசல்மணி குளத்தின் நீர் மட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சி.எம்.பி வாய்க்கால் வழியாக கரிசல்மணி குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது கரிசல்மணி குளம் ஏறக்குறைய முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.


Advertisement

Close