அதிரை ஆலடிக் குளத்திற்கு மீண்டும் ஆற்று நீர் வருகை!

அதிரையில் கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தரை மட்டத்திற்க்கு இருந்த அதிரையில் உள்ள சில குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அதிரையில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஏரி நீர் நிரப்பப்பட்டதன் விளைவாகவும் ஆலடி குளம் உட்பட பல குளங்கள் நிரம்பின.

மேலும் சில வாரங்களாக நிரம்பியிருந்த ஆலடிக் குளத்தின் நீர் மட்டம் குறைய துவங்கியது. ஆனால் நேற்றைய மழையின் காரணமாக ஆலடிக் குளத்திற்கு சி.எம்.பி வாய்க்கால் வழியாக மீண்டும் வந்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

Close