அதிரையில் விடிய விடிய விடாமல் கொட்டி வரும் கனமழை!

அதிரையில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வந்த கனமழை கடந்த ஒரு வாரமாக சற்ரு தனிந்திருந்தது. இந்நிலையில் நேற்று முந்தினம் நாள் முழுவதும் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்தது.

இதனையடுத்து நேற்று மழை பெய்யாத நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு தொடர்ந்த கனமழை தற்பொழுது (9:10) மணி வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அதிரையின் சாலையோரங்களில் மழை வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவினாலும் வெளியே செல்லமுடியாமல் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

Advertisement

Close