திருச்சி அருகே ஊரே இஸ்லாத்தை விட்டு வெளியேறியது என்பது பொய்யான செய்தி!

ஒரு பொய்யான தகவல் சமூக வளை தளங்களில் பரவிவருகிறது………

உண்மை ரிப்போர்ட் ……… திருச்சியிலிருந்து நமது செய்தியாளர் …..

திருச்சியில் மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம்: அதிர்ச்சி ரிப்போர்ட்… என்ற பெயரில் இலங்கையிலிருந்து ஒரு இணையதளம் மூலம் ஒரு பொய்யான தகவல் சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த கட்டுரையில் ஓரளவு உண்மை இருந்தாலும் அதில் கூறப்பட்டிருக்கும் மதம் மாற துணிந்த முஸ்லிம்கள் என்பது முற்றிலும் தவறானது. 

இந்த கட்டுரையை சமூக வலைய தளங்களில் பார்த்த தமுமுக மாநில தலைவர் ரிஃபாயி அவர்கள்,தமுமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களிடம் தொலைபேசியில் பேசி இது சம்மந்தமாக உடனே விசாரித்து தகவல் கொடுக்கும்மாறு கூறியிருந்தார்கள்.அதன் அடிப்படையிலும் பல்வேறு ஊர்களை சேர்ந்த சகோதரர்களும்,வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்களும் இது பற்றி கேட்டனர்.

சமயபுரம் அருகே உள்ள சோழை மொழி நகர் என்ற கிராமத்திற்கு இன்று 16.12.2014 செவ்வாய் கிழமை நேரடியாக சென்று விசாரித்ததில்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சிக்கு உட்பட
சோழை மொழி நகர்,முல்லை நகர்,காந்தி நகர் என்கிற பகுதியில்சுமார் 35
குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் ஏற்கனவே கொள்ளிடம் அருகில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.

இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பிழைப்புக்காக இங்கு
வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.கொள்ளிடம் பகுதியில் சாலை
அகலப்படுத்துவதால் இவர்களுக்கு மாற்று இடமாக திருச்சி சமயபுரம் அருகே
உள்ள இருங்கலூர் ஊராட்சிக்குட்ட இடத்தில் குடிசை அமைத்து இருந்து
கொள்ளுங்கள் என்றும்,பிறகு அவர்களுக்கு அந்த இடத்திற்கு பட்டாவும்
வழங்கியுள்ளார்கள் அதிகாரிகள்.அதுமட்டும்மல்லாமல் கோவிலுக்கும்,பள்ளி
வாசலும் இடமும் ஒதுக்கி கொடுத்துள்ளார்கள்.

அரசால் கொடுத்த இடம் தான் அங்கு பள்ளி அமைந்திருக்கும் 4 சென்ட் இடம்.அரசே அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளதால்இவர்கள் வீடு கட்டி தருவதற்காக மதம் மாற துணிந்தார்கள் என்பது முற்றிலும் தவறானது.இங்கு வசித்து வரும் மக்கள் பீடி தொழில்,பெயின்டிங் மற்றும் கட்டிட தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக திருச்சி வந்த மக்கள் ஒரு மஹல்லாவிற்கு உட்பட்ட இடத்தில் தங்காமல் மாற்று மதத்தினர் இருக்கும் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு மார்க்கம் சம்மந்தமான எவ்வித விசயங்களும் தெரியாமல் அவர்களுடன் நேர்த்திகடன் செலுத்த கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் அவல நிலையில் இருந்துள்ள நிலையில் தான் இவர்களுக்கு சோழை மொழி நகர் பகுதயில் இவர்களுக்கு இடம் கொடுத்து வழிபாடு நடத்த பள்ளி வாசலுக்கும் இடம் ஒதுக்கப்பட்டும்இருந்தது.அப்போது பாபு என்பவர் தான் முதன் முதலில் அங்கு குடிசையாக அமைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு தலைவராக செயல்பட்டு வந்தார்.

இருந்தும் அவர்கள் சரியாக மார்க்க விசயங்களில் ஈடுபாடு இல்லாமல் தான்
இருந்து வந்தார்கள். இதனிடையேஒரு ரமலான் மாத்தில் தராவிஹ் தொழுகை நடத்துவதற்காக அல்ஹாபிஸ் மெளலவி. அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர் ஒரு நண்பர் மூலம் அழைக்கப்பட்டார்.இவர் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம்பெற்றவர்.இவர் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் உள்ள ஒரு மதரஸாவில் இரண்டு வருட மார்க்க கல்வியும் பயினறுள்ளார். சோழை மொழிநகருக்கு தராவிஹ் தொழ வைக்க வந்த இவர் இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும் மார்க்க கடமைகள் பற்றியும் தொழுகை, நோன்பை பற்றியெல்லாம் தெரியாமல் இருந்ததை பார்த்த இவர் இம்மக்களுக்கு மார்க்க கடமைகளை கற்றுக்கொடுக்க இங்கே தங்கியது. மார்க்கத்திற்காக இவர் செய்த தியாகம் நம்மை மெய் சிலிற்க்க வைக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்…இப்பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றிவரும் அப்துல் கரீம் மெளலவிக்கு 300 ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டது. அதும் சிறிது காலத்திற்கு பிறகு தர முடியாத சூழ்நிலையில் இவரே சமயபுரத்திற்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து பள்ளியில் இமாமத் செய்தும் அப்பகுதி குழந்தைகளுக்கு மதரஸா வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

இவரின் செயலை பார்த்த தமுமுக திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பு குழு
உறுப்பினர் மாலிக் அவர்கள் இவருக்கு கருவாடு விற்கும் தொழில் செய்யவும்
உதவி உள்ளார்.இந்த ஊரை பற்றி கேள்விபட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு (United Welfare Organization – UNWO) சோழமொழி கிராமத்துக்குச்சென்று குடிசை
ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது. பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற
பெயரில்நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில்ஐந்நேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்க சொற்பொழிவுகள்என்பன நடைபெற்றன. 

Advertisement

Close