அதிரையில் “நாய்கள் ஜாக்கிரதை”!

அதிரையில் தற்பொழுது நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்  சாலையில் செல்வதற்க்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில் உச்சக்கட்டமாக அதிரை சுரைக்காய் கொல்லை, பழஞ்செட்டித் தெரு, கரையூர் தெரு, ஸிபா மருத்துவமனை அருகில் உள்ள காலனி ஆகிய பகுதிகளில் இந்த தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த பகுதி சாலைகளை ஒருவர் கடந்து சென்று அதை ஒரு தெரு நாய் பார்த்தால் அவர் பைக்கில் சென்றால் கூட அவரை விரட்டி படாதபாடு படுத்திவிடும். இதுவரை யாரையும் நாய்கள் க‌டித்ததாக புகார் இல்லையென்றாலும் நாய் துரத்தி அவதியடைந்தோர் பலர் உள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து நமக்கு அளித்த தகவலின் பேரில் இந்த செய்திகளை பதிகிறோம்.

Advertisement

Close