முத்துப்பேட்டை அருகே பைக்கில் சென்ற வாலிபரிடம் வழிபறி!

முத்துப்பேட்டை  அருகே  பைக்கில் சென்றவரிடம் பணம், செல்போனை  பறித்துச் சென்ற 2 பேரை போலீசார்  கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர் குளம் கரையங்காடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் தங்கராசு (37). இவர் பல ஆண்டுகளாக கோவையில் வேலை பார்த்து வருகிறார்.

சில  தினங்களுக்கு முன் விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டைக்கு பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பரணிகுமார்(26) என்பவர் தங்கராசுவை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தங்கராசு புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர்  வெர்ஜினியா வழக்கு பதிவு செய்து பரணிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Close