அதிரை வண்டிப்பேட்டையில் சலசலப்பு! முழு விபரம்!

அதிரை பிறையில் நேற்று மாலை வண்டிப்பேட்டையில் இளைஞர்கள் சிலர் சாலை மறியல் செய்திருந்ததாகவும் அவர்கள் உடனே போலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி பதிந்திருந்தோம். இது குறித்த மேலும் விபரங்கள் பதியப்படும் என்று அறிவித்திருந்தோம்.

இது குறித்த தகவல்:

நேற்று மாலை வண்டிபேட்டையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து வாகனங்களை நிறுத்துவதற்காக திடீரென சில இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலிஸார் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் போலிசார் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட இளைஞர்களின் பெயர்கள் சில காரணங்களுக்காக மறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close