ஹரியானாவில் கலவரம்! பள்ளிவாசல்கள் இடிப்பு! முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீவைப்பு!

கடந்த திங்கள்கிழமை அன்று ஹரியான மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அடாலி கிராமத்தில் பள்ளிவாசல் கட்டுவது சகித்துக்கொள்ளாமல் ஜட் இன கலவரக்காரர்கள் பெட்ரோல் கேன்களுடன் வந்து பள்ளிவாசலை எரித்தனர் அதை ஒற்றியுள்ள முஸ்லிம்களின் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து எரித்தனர்.

500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பயத்தில் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை தேடி சென்றுவிட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது முஸ்லிம்களின் வீடுகள் திறந்தே கிடந்தன மின்விசிறிகள் சுற்றி கொண்டிருந்த நிலையில் இருந்தன அதை நாங்கள் தான் அணைத்தோம். அச்சத்தில் அவர்கள் வீடுகளை விட்டு சென்றுவிட்டனர்.
புதான் கான் கூறும்போது அவர்கள் என்னுடைய இரு கைகளும் கட்டி இந்த கை தான் பள்ளிவாசலை கட்டுகிறது என கூறி பெட்ரோல் உற்றி தீயிட்டனர் வலியால் கடுமையாக கதறினேன், பிறகு அங்கிருந்து தப்பி நீர் நிலையத்தில் கையை நனைத்து சுயநினைவை இழந்தேன்.
அடாலி ஜும்மா பள்ளிவாசல் ஐந்து வருடத்திற்கு முன்பே கட்டுவதற்கு பணிகளை அரமித்தனர், இதற்கு ஜட் இன மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர், இங்கு பள்ளிவாசல் கட்ட நாங்கள் விரும்பவில்லை என தெரிவத்தனர், வழக்கு நடக்குபோதே பள்ளிவாசல் இடம் பக்கத்தில் மரத்தை சுற்றி ஒரு சிறு சிலையை வைத்து தீடிரென்று குட்டி கோவிலை உருவாக்கினர்.
கோர்ட்டும் வழக்கை விசாரித்து முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதி அளித்தனர், இதையடுத்து கடந்த வாரம் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டும் பணியை ஆரமித்தனர். பிரச்சினை வரக்கூடிய இந்த இடத்தில் காவல்துறை பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தவில்லை. தற்பொழுது முஸ்லிம்கள் மிகவும் அச்சத்துடன் இருகின்றனர் அப்பகுதியில்.
சிலர் கடுமையான தீ காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close