மீத்தேன் திட்ட அலுவலகம் மூடல்…?

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக இயங்கி வந்த திட்ட அலுவலகம் திடீரென காலி செய்யப்பட்டுள்ளது.

 தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் மீத்தேன் வாயுவை எடுக்க ‘தி கிரேட் இஸ்டன் எனர்ஜி கார்ப்பிரேஷன்’ என்ற நிறுவனம் பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது. இதற்காக தஞ்சாவூரில் கள அலுவலகம் அமைத்திருந்தது.
பொதுமக்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர்,  மீத்தேன் திட்டம் செயல்படுத்த கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தஞ்சாவூரில் செயல்பட்டு வந்த இந்நிறுவன அலுவலகம் நேற்று திடீரென் காலி செய்யப்பட்டுள்ளது.
‘மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அரசு கை விட்டு விட்டது. அதனால்தான், அலுவலகத்தை காலி செய்துவிட்டார்கள்’ என்ற செய்தி இந்த பகுதியில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ‘தஞ்சாவூரில் உள்ள அலுவலகம் வாடகை கட்டடம். ஆகையால், காலி செய்கிறோம்’ என்று தி கிரேட் இஸ்டன் எனர்ஜி கார்ப்பிரேஷன் அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

Close