அதிரை C.M.P.லேன் வாசிகளை அச்சுறுத்தும் அட்டை பூச்சிகள் (படங்கள் இணைப்பு)

adda_Fotor_Collage copyதிரை சி.எம்.பி லேன் பகுதியில் உள்ள ரேசன் கடை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் வாடி ஒன்று உள்ளது. இந்த வாடியில் உள்ள அட்டை பூச்சிகள் கடந்த சில நாட்களாக அக்கம்பக்கத்து வீட்டுகளுக்கு சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் அருகில் உள்ள வீட்டார்கள் அச்சத்தில் உள்ளதுடன் வீடுகளுக்கு வரும் அட்டைப்பூச்சிகளை விரட்ட முடியாமலும், தடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அட்டைப்பூச்சி என்னும் இந்த சிறிய உயிரினம மனிதர்களின் இரத்தத்தை எளிதாக வேகமாக உறிஞ்சிக்கொள்ளக்கூடியது. நமது தோலில் இது ஒட்டிக்கொண்டால் எடுப்பது சிரமமானது. மனிதர்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய இந்த உயிரினத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட வாடி உரிமையாளர்கள் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close