அதிரை ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகே தேங்குவது மழை நீர் அல்ல, கழிவு நீர்!

அதிரை ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலைகளின் ஓரத்தில் பல வருடங்களாக தண்ணீர் தேங்கி நிற்பதை நாம் கண்டிருப்போம். இந்த கழிவு நீர் ECR சாலையின் ஓரத்தில் நீளமாக ஆறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரும் பேருந்து நிலையம் அருகே தேங்கி நிற்ப்பது மழை நீர் எந்து தான் எண்ணிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த தண்ணீர் பாரி மளிகைக்கு இடது புறமாக, ஜெயா ரெடிமெட்ஸ் அருகில் உள்ள கால்வாயில் பல வருடங்களாக தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதனை சரி செய்தால் மக்கள் அதிகம் கூடும் இப்பகுதியில் பல வருடங்களாக ஓடிக்கொண்டும் தேங்கிக்கொண்டும் இருக்கும் கழிவு நீரை தடுக்குலாம்.

இது குறித்து அப்பகுதியில் தரைக்கடை வியாபாரிகள் கூறுகையில் இந்த கழிவு நீரால் இங்கு கொசுத்தொல்லை அதிகமாவதுடன், எங்களுக்கும் கொடிய தொற்று நோய்கள் வரும் நிலை உள்ளது. இந்த கால்வாயை சரி செய்தாலே இந்த கழிவு நீர் வெளியாவதை தடுக்கலாம் என்றார்.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்படவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close