சவூதியில் அதிசயம்! புற்றுநோயை குணப்படுத்திய ஜம் ஜம் தண்ணீர்!

ரியாத்தில் உள்ள உஸ்மான் பின் அப்பான் மஸ்ஜிதின் இமாமும் இஸ்லாமிய பல்கலை கழகத்தின் பேரசியருமான யுசுப் பின் முஹம்மத் மஹீஸ் ஒரு அழகிய நிகழ்வை தமது உரை ஒன்றில் பதிவு செய்தார் 

ஆம் பெரும் குடல் புற்று நோயால் பாதிக்க பட்ட ஒரு பாக்கிஸ்தானியரின் வாழ்வில் அரங்கேறிய அதிசயம் தான் அது. சவுதி அரேபியாவில் முடி திருத்தும் பணி செய்து வந்த அந்த பாக்கிஸதான் நாட்டவர் பெருகுடல் புற்று நோயால் பாதிக்க பட்டு அவதி பட்டு வந்தார் முதலில் அவர் செய்து கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் பெருங்குடல் புற்று நோயால் பாதிக்க பட்டிருந்த்து உறுதி செய்ய பட்டிருந்தது

மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை தவிர வேறு வழி இல்லை என்று அவரிடம் தெரிவித்து விட்டனர். சில மாதங்களுக்கு பிறகு அவர் அறுவை சிகிச்சை செய்வதர்காக அவர் மருத்துவமனை சென்றார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உனது உடலில் எந்த புற்று நோயும் இல்லை என்று விளக்கமளித்து விட்டு என்ன மருந்து உட் கொண்டாய் என நோயாளிடமே கேட்டனர் 

அதற்கு அவர் நான் நான்கு முறை உம்ரா செய்துவிட்டு ஸம்ஸம் தண்ணீரை வயறு நிறம்ப குடித்த்தை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை என கூறி விட்டு அந்த ஸம்ஸம் நீரின் மகத்துவத்தாலும் என பிரார்த்னையின் பயனாலும் எனது இறைவன் எனது உடலில் இருந்து புற்று நோயை நீக்கிவிட்டான் அவனுக்கே அனைத்து புகழும் என மகிழ்சியோடு கூறி விட்டு மருத்துவ மனையில் இருந்து விடை பெற்றார்.

Advertisement

Close