அதிரையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒரு கலந்துரையாடல்..!

அதிரையில் இந்த சாலை மறியல் வெகு நாட்களாக நடைப்பெறுகிறது. இந்த மறியலை நிறுத்த பல முயர்ச்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இவை யாவும் இந்த மறியல் செய்பவர்களிடம் எடுபடவில்லை. சென்ற் ஆண்டு கூட இந்த மறியல் செய்தவர்களை அதிரை பேருராட்சியினர் கைது செய்தனர். சில நேரம் கழித்து இவர்கள் விடுவிக்கபட்டதும் மீண்டும் தங்கள் மறியலை துவக்கிவிட்டனர்.
இது குறித்து அவர்கள் அதிரை பிறையிடம் நடத்திய கலந்துரையாடல் பின்வருமாறு….

அதிரை பிறை நிருபர்: நீங்கள் எதற்க்காக இவ்வாறு சாலை மறியல் செய்து
                                            மக்களை சிரமப்பட வைக்கிறீர்கள்?

மறியல்காரர்: எங்கள் உரிமையாளர் எங்களை சரியாக கவனிக்கவில்லை.

அதிரை பிறை நிருபர்: உங்கள் உரிமையாளர் உங்களுக்கு என்ன செய்கிறார்
                                              என்று சற்று தெளிவாக கூறுங்கள்!

மறியல்காரர்: எங்கள் உரிமையாளர் எங்களிடம் என்ன நாடுகிறாரோ அதை                                    காலையிலே எடுத்து விட்டு எங்களை விட்டு விடுகின்றனர்.                                      மேலும் அவர்கள் எங்களுக்கு சரியாக உணவளிப்பதும் இல்லை.                              இதனால் தான் நாங்கள் சாலைகளில் திரிந்து                                                                      கிடைப்பதையெல்லாம் திண்ணும் அவல நிலைக்கு நாங்கள்                                       தள்ளப்பட்டுள்ளோம். 
அதிரை பிறை நிருபர்: இது போன்று வீதிகளில் கிடைப்பதையெல்லாம்                                                               திண்பதால் உங்களுக்கு என்ன என்ன சிரமங்கள்                                                               ஏற்ப்படுகிறது? 
மறியல்காரர்: 
பல கஷ்டங்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.                                                     முன்பெல்லாம் ஊர் முழுவதும் தோப்பு துரவுகள் நிறம்பி                                       வழியும், அங்கு சென்று எங்கள் வயிற்றை                                                                             நிரைத்துக்கொண்டோம். ஆனால் தற்பொழுது அவையாவும்                                       வீடுகளாகவும் குடியிருப்பு பகுதிகளாகவும் மாறப்பட்டுள்ளது.                                   சரி மீதம் உள்ள தோப்புகளை தேடி சென்றால் அங்கு வேளி                                         அடைத்து உள்ளே நுழைய முடியாதவாறு செய்து                                                              விடுகின்றனர்.சாலை ஓரங்களில் ஏதாவது செடிகள்                                                        வளர்ந்திருக்கும் அதை சாப்பிடலாம் என்றால் சாலை                                                    ஓரங்களில் குப்பை கூளங்களும் பாலிதீன் பைகளுமே உள்ளன.                                வேறு வழியின்றி நாங்கள் அதை உண்டு வாழ்ந்து                                                             வருகிறோம்.அதன் விளைவு தற்பொழுது எங்கள் இனத்தவர்கள்                                 கோமாறி என்னு கொடிய நோயால் அவதிப்பட்டு                                                              வருகின்றனர்.
அதிரை பிறை நிருபர்: சரி உங்களின் கோரிக்கை தான் என்ன?
மறியல்காரர்: 
எங்கள் உரிமையாளர்கள் எங்களை சரியாக பார்த்துக்கொள்ள                                 வேண்டும். நேரம் தவறாமல் உணவளிக்க வேண்டும். ஏதாவது                                  ஒரு இடத்தை எங்களுக்காக ஒதுக்கி நாங்கள் நிம்மதியாக                                          நடமாட வழிகான வேண்டும். இவை அனைத்தையும் அவர்கள்                                  நிறைவேற்றினால் எங்களின் இந்த சாலை மறியலை நிறுத்திக்                                கொள்கிரோம். இல்லையென்றால் எங்களின் இந்த போராட்டம்                                 தொடரும்…
அதிரை பிறை நிருபர்: உங்கள் கோரிக்கைகள் நியாயமானது…வெற்றி பெற                                                       வாழ்த்துக்கள்.
மறியல்காரர்: இந்த உலகில் எங்களுக்கும் சம பங்கு உள்ளது. அனைவரும்                                      எங்களை அடித்து விரட்டினால் நாங்கள் எங்கு                                                                    செல்வது…முடிவை கூறுங்கள்…
நமதூரில் சாலைகளில் திரியும் மாடுகளின் மனதுக்குள் இருக்கும் அவர்களின் குமுறலை கர்ப்பனையாக ஒரு கலந்துரையாடல் போன்று வடிவமைத்து உள்ளோம்.
கால்நடைகள் நமதூரில் படும் கஷ்டத்தை அறிந்து இருப்பீர்கள்….அவைகளுக்கு என்ன தான் வழி….என்பதை கருத்தாக பதியுமாறு கேட்டுக்கொள்கிரோம்.
ஆக்கம்: அதிரை பிறை
Close