அதிரையில் மக்களிடம் அநாகரிகமாக நடந்துக்கொள்ளும் இந்தியன் வங்கி மேலாளர்!

தற்போது மத்திய அரசால் கேஸ் சிலிண்டர் மானியம் பெற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிரையில் மக்கள் இண்டேன் கேஸ் அலுவலகத்துக்கும் வங்கிகளுக்குமாக அலைந்து வருகின்றர். வங்கி கணக்கு இருந்தால் தான் கேஸ் மானியம் பெற முடியும் என்பதால் பலர் புதிதாக அதிரையில் புதிய வங்கி கணக்குகளை திறந்து வருகின்றனர்.

இதுபோல் அதிரை சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த சகோரரின் தாயார் இந்தியன் வங்கியில் புதிதாக கணக்கு திறப்பதற்காக வங்கி மேலாளரை அனுகியுள்ளார். வங்கி மேலாளர் அந்த பெண்னிடம்  உங்கள் வயது என்ன என்று கேட்டுள்ளார். தன் வயது 55 என்று அப்பெண் கூறவே, இவ்வளவு வயதிற்கும் மேல் அக்கவுண்ட் திறந்து உங்கள் என்ன ஆகப்போகிறது இன்னும் சில ஆண்டு கடந்தார் வயது 60 ஆகிவிடும் என்ற ஏளனமாக பேசியுள்ளார். அதற்கு இது உங்களுக்கு தேவையில்லாத கேள்வி கேஸ் மானியம் பெறுவதற்காக வேண்டு அரசாங்கத்தில் சொன்னதால் கணக்கு திறக்கவந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அதற்காகவெல்லாம் இங்கு கணக்கு திறக்க முடியாது, சரி ப்ரூப் என்ன வைத்துள்ளீர்கள்? ஆதார் கார்டு உள்ளதா? என்று கேட்டுள்ளார். ஆதார் கார்டு இல்லை, பாஸ்போர்ட் உள்ளது என்று கூற பாஸ்போர்ட் உங்களுக்கு எப்படி வந்தது? விளக்கமளியுங்கள் என்று கேட்க, இந்த கேள்வி அநாவசியமானது. முறையாக தான் நாங்கள் பாஸ்போர்ட் பெற்றுள்ளோம். போலிஸ் போல் குறுக்கு விசாரனை செய்யாதீர்கள்! என்று அப்பெண் கூற  வங்கி மேலாளர் இங்கு அக்கவுண்ட் திறக்க முடியாது. என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  பின்னர் அப்பெண் வேறு வங்கியில் கணக்கை திறந்துவிட்டார்.

பொதுமக்களிடம், வாடிக்கையாளர்களிடம் அநாகரிக போக்குடனும் சந்தேகப்போக்குடனும் செயல்படும் அதிரை இந்தியன் வங்கி மேலாளரின் இப்போக்கு கண்டிக்கத்தக்கது.

Advertisement

Close