குற்றச்செயல்களின் கூடாரமாக திகழும் அதிரை ரயில் நிலையம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் ஒரு காலத்தில் எந்நேரமும் பரபரப்பான முக்கியமான பகுதியாக இருந்தது ரயில் நிலையம். அன்றாம் பலர் சென்னை, திருச்சி, திருவாரூர் போன்ற பல பகுதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக செல்வதற்கு இந்த ரயில் பயணத்தையே நமதூர் மக்கள் அன்றைய காலக்கட்டங்களில் மேற்கொண்டனர். காலம் மெல்ல நகர இம்மக்களுக்கு பேரிடியாக வந்தது அகல ரயில் பாதைத்திட்டம் குறித்த செய்தி. உடனை அதிரை வழியாக சென்னைக்கு செல்லும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டு அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து ரயில் சேவையும் இத்தடத்தில் நிறுத்தப்பட்டது.
இதுபற்றி பலவேறு போராட்டங்கள் நடத்தியுன் கோரிக்கை மனுக்கள் வழங்கியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்க்காக நிதி ஒதுக்கப்பட்டும் வேலைகள் நடைபெறமல் உள்ளது.
இவ்வனைத்து காரணங்களால் அதிரை ரயில் நிலையம் பொழிவிழந்து காணப்படுகிறது. தற்போது குடிப்பவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் கூடும் இடமாக இந்த ரயில் நிலையம் மாறியுள்ளது.
இதனை நிலையை கீழ்காணும் படங்களை வைத்து நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

Advertisement

Close