Advertisement

' />

அதிரையிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கு தேர்வடைந்த மாணவர்கள்!

கேரளாவில் நடக்க இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்தாட்ட தொடர் போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்காக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் தேர்வடைந்துள்ளனர்.

நமதூர் கல்லூரியில் M.COM முதலாம் ஆண்டு படிக்கும் நடுத்தெருவை சேர்ந்த தமீம் அன்சாரி என்பரின் மகனான முஃபீஸ் அகமது(அதிரை AFFA வீரர்) மற்றும் B.SC முதலாம் ஆண்டு படித்துவரும் சேதுரோடு பகுதியை சேர்ந்த சிராஜுத்தீன் என்பவரின் மகனான சைஃபுத்தீன் ஆகிய இருவர் தங்களின் சிறப்பான கால்பந்தாட்டத்தினால் பல்கலைக்கழக அணிக்காக தேர்வாகி விளையாட உள்ளனர்.

இவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close