அதிரை “பஸ் ஸ்டாண்டு TO வண்டிப்பேட்டை” இது தான் நம்ம ஊரின் நிலைமை! (படங்களுடன் பயணம்)

அதிரையில் கடந்த சில வருடங்களாக மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது பஸ் ஸ்டாண்டில் இருந்து வண்டிப்பேட்டை செல்லும் சாலை. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இச்சாலையில்ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பெரிதும் துயரடைந்துள்ளனர். அது வாகனங்களில் செல்வோராக இருந்தாலும் சரி பாதசாரிகளாக இருந்தாலும் சரியே. இதில் யாருக்கும் விதி விலக்கல்ல.
இன்று பெய்த சில மணி நேர மழைக்கே இச்சாலை ஒரு மினி கூவம் போல் தான் காட்சியளிக்கிறது.
சரி! உதாரணத்திற்கு ஒருவர் வாகனத்திலோ அல்லது நடந்தோ பஸ் ஸ்டாண்டில் இருந்து வண்டிப்பேட்டை செல்ல நாடுகிறார். அவர் இச்சாலையை எப்படி கடந்து செல்வார் என்பதை படங்களுடன் பார்போம்.

பஸ் ஸ்டாண்டின் படத்தை பாருங்கள்! இதை கடந்து தன் மீது சேறு படாமல் வந்தால் அவருக்கு கின்னஸ் சான்றிதழே கொடுக்கலாம்!

தப்பித்தவறி அவர் பேருந்து நிலையத்தை கடந்து விட்டாலும் அடுத்த பத்து, இருபது மீட்டரில் இன்னுமோர் சாகசம் ஏதாவது செய்து தான் இப்படத்தில் உள்ள சாலையை கடக்க முடியும்.

அடுத்த 15 மீட்டரில் மேலும் ஒரு குண்டும் குழியுமான பகுதி.

அடுத்தது பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப் சிறிய குளம் போல் உள்ளது. சாலையோரம் நடந்தால் கூட வாகனங்கள் நம் மீது சேற்றினை வாறியடித்து சென்று விடும்.

இந்தியன் வங்கி எதிரில்! வங்கிக்கு வரும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் சேதமடைந்துள்ள இச்சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இன்னும் சில அடிகள் நடந்தால் மக்கள் அதிகம் கூடும் பகுதியான சேர்மன் வாடி. குண்டும் குழியுமான சாலையால் பொழிவிழந்து காணப்படுகிறது. இதனை கடப்பதும் ஒரு விதத்தில் சாதனை தான்.

சரி அப்படியே சிறிது தூரம் நிம்மதியாக சென்றால் அடுத்தாக வருகிறது, வண்டிப்பேட்டை இப்பகுதியிலும் மேற்க்கூறப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைதான்.

இப்படித்தான் பல துயரங்களையும் அனுபவித்து தான் பலரும் இவ்வழியாக செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறையினர் இச்சாலை சீரமைப்பு பணியை விரைந்து துவங்குவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொகுப்பு: நூருல் இப்னு ஜஹபர் அலி

படங்கள்: இர்ஷாத் அஹமது.

Advertisement

Close