FLASH NEWS: அதிரை அருகே பயங்கர பேருந்து விபத்து! O படுகாயம் (படங்கள் இணைப்பு)

busஅதிராம்பட்டினம், டிசெம்பர் 02: நாகப்பட்டினத்தில் இருந்து இராமனாதபுரம் செல்லும் அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஈ.சி.ஆர் சாலை வழியாக  பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் புறப்பட்டு வந்துக்கொண்டிருந்தது.

இன்னிலையில் அதிராம்பட்டினம் அருகில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் வந்துக்கொண்டிருக்கும் போது மோசமான சாலை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாராக சென்று சாலையோரம் உள்ள ஒரு குடிசையின் மீது மோதியது.

இதில் பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்: அஹமது ஜைத் (அதிரை பிறை நிருபர்)

Close