அதிரை கடல் பகுதியில் வெள்ளி மீன்கள்!

அதிராம்பட்டினம்  கடல்  பகுதியில்  வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. மீனவர்களின் வலையில் மீன்கள், இறால்கள் நண்டுகள் அதிகளவில் அகப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளி மீன்கள் அதிகமாக அகப்பட்டு வருகிறது.

அதிராம்பட்டினம் பகுதியில்  வெள்ளி மீன்களை பிடிப்பதற்கு மட்டும் சில மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இங்கு பிடிபடும் வெள்ளி மீன்கள், கேரளா பகுதிக்கு அனுப்பப்படுகிறது. கேரளாவில் இந்த மீன்களுக்கு  நல்ல  வரவேற்பு உள்ளது. இப்போது அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்து  மீனவர்  சொக்கன்  கூறுகையில்,  வெள்ளி மீன்களுக்கு பல பெயர்கள் உண்டு.  இதற்கு தேசபொடி,  வெள்ளைபொடி,  மட்லிஸ், வெள்ளாளம்பொடி என பல பெயர்களில் மீனவர்கள் அழைக்கின்றனர்.  ஒரு படகுக்கு 10 கிலோவிலிருந்து  20  கிலோ வரை வெள்ளி மீன்கள் அகப்படுகிறது.

Advertisement

Close