அதிரை அருகே பயங்கரம்! இளம்பெண்ணுக்கு கத்தி குத்து!

அதிரை அருகே கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல் இவரது மனைவி டயானா(21). இவர்களுக்கும்  அதே கிராமத்தை சேர்ந்த சேவியர், சகாயம் ஆகியோருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்   இன்று இரவு 8.45 மணியளவில் சேவியர், சகாயம் மற்றும் ஒருவர் சேர்ந்து டயானாவை  கத்தியால் குத்தினர்.
இதில் டயானாவின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு      போராடிய  நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Close