அதிரை 10வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தரகர் தெருவில் பல நாட்களாக கொட்டப்படும் குப்பை சரிவர அள்ளப்படாத காரணத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியுள்ளது. அதிரை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் பல நாட்களாக குப்பைகளை கொட்டுகின்றனர்.

இப்படி கொட்டப்படும் குப்பைகள் துப்பரவு ஊழியர்களால் சரிவர நேரத்திற்கு அள்ளப்படவில்லை எனவும் இதனால் மழை நேரங்களிலும், அதிகமான காற்று வீசும் நேரங்களிலும் இப்பகுதியில் குப்பைகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும் கொசுத்தொல்லையும் நிலவுகின்றது.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொடிய நோய்கள் பரவும் அபாயமும் நிலவியுள்ளது. இப்பகுதியில் சிமெண்ட் குப்பை தொட்டி ஒன்றை கட்டித்தந்தால் இப்பகுதியில் குப்பைகள் குவிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் அப்பகுதியினர்.

பொதுமக்களின் நலனில் அக்கரை கொண்டு இப்பகுதியில் குவியும் குப்பைகள் விரைந்து அள்ளப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

' />

அதிரை தரகர் தெருவில் குவியும் குப்பைகளால் பரவும் நோய்கள்!

Close