உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்கள் 500 பேரில் கீழக்கரை B.S.அப்துர் ரஹ்மான்!

உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 500 பேரில் ஒருவராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பட்டியலில் சவூதி அரேபியா அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் முதலிடம் பெற்றுள்ளார் உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக தேர்வு உலகில் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொழித்துறை பிரிவில் உலகில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்கள் என்று 24 நபர்கள்(2014/2015) தேர்வு செய்யப்பட்டு அதில் இந்தியாவிலிருந்து ஒருவராக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹமான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Close