அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

aiman03.12.2015 அன்று அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 44 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அய்மான் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் சிறுவர் ,சிறுமியர்,ஆண்கள், பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர். நிகழ்வில் மருத்துவ பரிசோதனை, சிறியோர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தங்க காசு,மொபைல் போன்கள்,வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதியும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது.

மருத்துவ பரிசோதனையையும், புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த விளக்கத்தையும் காயல். டாக்டர் சையத் அஹமது சிறப்புற வழங்கினார். ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள்,சகோதர சமுதாயத்தைச் சார்ந்த சகோதரர்கள் என பலரும் பங்கேற்றனர்.

அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிக சிறப்புடன் ஒருங்கிைணைத்திருந்தனர்.

7544_n273787_n84788_n

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author