அதிரையில் மிக சிறப்பாக நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாடு!(படங்கள் இணைப்பு)

கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்திய 4ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று (29-05-2015) மாலை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடற்கரைத் தெரு ஜமாத் ஆலோசகர் S.M.அக்பர் ஹாஜியார்  அவர்கள் தலைமை வகித்தார்கள் . கடற்கரைத் தெரு ஜமாத் தலைவர் Engr. M.அகமது அலி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.மேலும் அதிரை பேரூராட்சி 8 வது வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர்  J.ஹாஜா கனி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் +2, 10 பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் கடற்கரைத்தெருஅமீரக அமைப்பின் இணை செயலாளர் M.அகமது அன்சாரி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள்,ஊர் பிரமுகர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்,பள்ளி ஆசிரியர்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close