உள்ளூர்

அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

poஅதிரையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை குறைந்தது. இருப்பினும் அதிரையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பழைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் மாஸ் கலெக்சன்ஸ் காலனி கடையின் எதிரில் உள்ள பழைய வணிக வளாகத்தின் மேல்கூரை இன்று காலை மளமளவென சரிந்து விழுந்தது.

இதனால் அருகில் உள்ள சிக்கலான மின்கம்பிகளின் மேல் இந்த கூரை விழும் வண்ணம் ஆபத்தான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close