கடை இடிந்து விழுந்ததால் அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் செல்ல தற்காலிக தடை!

yuஅதிரையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை குறைந்தது. இருப்பினும் அதிரையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பழைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் மாஸ் கலெக்சன்ஸ் காலனி கடையின் எதிரில் உள்ள பழைய வணிக வளாகத்தின் மேல்கூரை இன்று காலை மளமளவென சரிந்து எதிரில் உள்ள மின்கம்பிகளின் மீது விழுந்தது.

இந்நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. அறுந்த இடிபாடுகளால் அறுந்த மின்கம்பிகளை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் செல்ல தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது

adiraipirai

Close