அதிரை செஸ் போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் வெற்றி! (படங்கள் இணைப்பு)

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிரை சிட்னி அணியின் சார்பாக ஜூனியர் செஸ் போட்டி நடைபெற்றது. அதிரை பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் என பலர் பங்கேற்றனர். இதில் கலந்துக்கொண்டு விளையாடிய அதிரை காதிர்  முகைதீன் ஆண்கள் பள்ளி மாணவர்களான வினோத் மற்றும் அஹமது ரிஜ்வான் ஆகியோர் சிறப்பாக விளையாடி முதலாவது மற்றும் இரண்டாவது பரிசுகளை தட்டிச்சென்றனர்.

இம்மாணவர்களுக்கு இன்று காலை அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜனாப். மஹ்பூப் அலி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி தமீம் அவர்கள்,முதுகலை ஆசிரியர்கள்  ஜனாப்.அஜ்முத்தீன் மற்றும் திரு. நாகராஜன், செஸ் போட்டி நிர்வாகிகளும் அதிரைபிறை செய்தியாளர்களுமான அஹமது சர்ஜஸ் மற்றும்  அஹமது  ஜைது ஆகியோர் உடனிருந்து பரிசுகளை வழங்கினர்.

பரிசு பெற்றவர்கள் விபரம்:

முதல் பரிசு – வினோத் குமார் (காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி)
இரண்டாம் பரிசு – அஹமது ரிஜ்வான் (காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி)
மூன்றாம் பரிசு – ப்ரவீன் குமார் (ஆக்ஸ்போர்டு பள்ளி – உள்ளூர் புதுக்கோட்டை)

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மேன்மேலும் பல வெற்றிகளை குவித்து  பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெறுமை சேர்த்துத் தருமாறு வாழ்த்துகின்றது அதிரை பிறை.



Advertisement
Close