அதிரையிலிருந்து பாபர் மசூதி மீட்பு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொள்ள புறப்பட்ட 180க்கும் மேற்பட்ட அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

tmmkஅதிராம்பட்டினம், டிசெம்பர் 06: கடந்த 1992 ஆம் ஆண்டு டிசெம்பர் 06 அன்று உலக முஸ்லிம்களுக்கு கருப்பு நாளாக அமைந்தது. காரணம், அயோத்தியில் 400 ஆண்டுகாலம் பழமையான பாபர் மசூதியினை சங்க்பரிவார் அமைப்புகளின் வழிகாட்டுதலின் படி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 23 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு பாபர் மசூதி கிடைக்கவில்லை.

எனவே பாபர் மசுதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் வருகின்ற டிசெம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை தஞ்சாவூர் ரயிலடியில் காலை 10:00 மணியளவில் பாபர் மசூதியை மீட்டெடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பிற ஊர் மக்கள் கலந்துக்கொள்ள அந்தந்த ஊர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதிரையில் இருந்து தஞ்சைக்கு போராட்டத்தில் கலந்துக்கொள்ள செல்பவர்களுக்கு அதிரை தக்வா பள்ளி வாசல் 10  வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் சுமார் 180 அதிரை வாசிகள் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.

Close