அதிரையில் தமுமுக சார்பாக கடலூருக்கு எடுத்துசெல்லப்படும் நிவாரண பொருட்கள் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம், டிசெம்பர் 07: சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 107 வருடங்களுக்கு பெய்த இந்த மழை காரணமாக சென்னை நகரம் ஒரு தனி தீவு போல் காட்சியளிக்கின்றது.இந்நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறார்கள். இவர்களுடன் அதிரையை சேர்ந்த பல அமைப்புகளுக்கு, தன்னார்வலர்களும், செல்வந்தர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அதிரை தமுமுக சார்பாக அரிசி, பருப்பு எண்ணெய் போன்ற சமையல் பொருட்களும், பற்பசை, பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கடலூருக்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட மாணவரனி தலைவர் நூர் முஹம்மது உள்ளிட்டோர் கொண்டுசெல்கின்றனர். இது போன்று மதுக்கூர், முஹம்மது பந்தர் போன்ற ஊர்களிலும் தமுமுக சார்பாக இது போன்ற நிவாரண பொருட்களை கடலூருக்கு கொண்டு செல்கின்றனர்.


gh

Close