தஞ்சை மாவட்டத்திற்கு இதுவரை வெள்ள நிவாரண நிதியாக 50 லட்சம் வழங்கல்! கலெக்டர் சுப்பையன் தகவல்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

9a0fe904-984d-4e05-a0f4-1ed03462136f_S_secvpf.gifதஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.

கலெக்டர் பேட்டி

தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் நேற்றுகாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவடடத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அருகில் எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட குடிசைவீடுகள், கால்நடை இறப்பு, மனித இறப்பு ஆகியவற்றிற்கு இதுவரை ரூ.49 லட்சத்து 87 ஆயிரத்து 200 நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை சரக வருவாய் ஆய்வாளர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கியகுழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வு அறிக்கை பெற்ற பின்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட நிவாரண பொருட்கள் 13 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 40 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்பு குழுவினர் தயார்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைகால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மழை காரணமாக வரும் உபரி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தொடர் மழையினால் பள்ளி, விடுதிகள், மருத்துவமனை வளாகத்தில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு இருக்கிறதா? என பொதுப்பணித்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மீட்புகுழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க விரும்புவர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் வழங்கலாம். ரொக்கமாக கொடுக்க விரும்புபவர்கள் வங்கி வரைவோலையாக முதல்-அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில் எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் 37 நடமாடும் மருத்துவக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் 5 படகுகள் மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 10 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பயிற்சி கலெக்டர் தீபக்ஜேக்கப் உடன் இருந்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் சுப்பையன் ஆலோசனை நடத்தினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author