தண்ணீர் குலுங்க குலுங்க காட்சி அளிக்கும் அதிரை வெள்ளக் குளம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில மாதங்களாக பேரூராட்சியால் குளங்களுக்கு தண்ணீர் நிறப்பப்பட்டதாலும், அதிரை பெய்த தொடர்மழையின் காரணமாகவும் அதிரையில் பெரும்பாலான் குளங்கள் தண்ணீர் நிரம்பி எழிலுடன் காட்சிதருகின்றன.

அந்தவகையில் அதிரை லாவண்யா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள வெள்ளக்குளத்திலும் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. சில வருடங்களாக அதிரையில் பொய்த்துப்போன மழை பொழிவின் காரணமாக இக்குளம் நிறையாமல் வறட்சியுடன் காட்சியளித்தது. தற்போது இக்குளம் நிறம்பியுள்ளதால் அருகில் வசிக்கும் மக்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் நீராடி செல்கின்றனர்.

மேலும் பட்டுக்கோட்டை சாலை வழியாக அதிரைக்கு வருபவர்களுக்கு இந்த வெள்ளைகுளமும் கரிசல்மணி குளமும் நமதூரின் பசிமை எடுத்துக்காட்டி கண்களுக்கு விருந்து வைக்கின்றன.Advertisement

Close