Advertisement

' />

அதிரை பைத்துல்மால் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு தேவை!

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு இளைஞர்களுக்கான பேராசிரியர் பரக்கத் சார் தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

இதில் அதிரை இளைஞர்கள் சிலர் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய பரக்கத் சார் அவர்கள் “அதிரை பைத்துல்மால் ஒரு பாரம்பரியமான ஒரு நிறுவனம். ஆனால் இது தற்பொழுது சரியான கவனிப்பு இன்றி உள்ளது. நிதிப்பற்றாக்குறையும் உள்ளது. இளைஞர்களின் பங்களிப்பும் சரியாக இல்லை. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிரை இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்றார்.

மேலும் நமதூருக்கு 24 மணிநேர மருத்துவ வசதி கொண்டு வருவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. இளைஞர்கள் சிலரும் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறினர்.

இது போல் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமானால் அதிரை பைத்துல்மால் மீண்டும் எழுச்சிபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement

Close