இஸ்லாமிய அமைப்புகளை மனதார வாழ்த்திய ஒன் இந்தியா இணையதளம்!

11-1384168497-oneindia-tamil-logo-600மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒன்று என்றால், பிரிவினைகள் தூள் தூளாகிப் போய் விடுகின்றன. அன்பும், மனிதமும் மட்டுமே அங்கு தழைத்தோங்கி நிற்கிறது. இதை சென்னை மக்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளனர்.. நமது நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே.

சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. யாரிடம் போய் உதவி கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் கலங்கிப் போய் தவித்தனர்.

எந்த “இயந்திரமும்” தங்களுக்காக ஓடி வராத நிலையில் ஆங்காங்கே உதவிக் கரங்கள் நீளத் தொடங்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களே் சுதாரித்து எழுந்து ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து தூக்க ஆரம்பித்தனர். யாருமே எதிர்பாராத அளவில் இந்த உதவிக் கரங்கள் மக்களுக்கு கை கொடுக்க ஆரம்பித்தன. எத்தனையோ கரங்கள். யார் யாரோ வந்தார்கள்.. முகமே தெரியாத நிலையில் அவர்கள் காட்டிய அன்பும், மனிதநேயமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருமருந்தாக அமைந்தன.

அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், SDPI, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆற்றிய சேவை மிகப் பெரியது, மகத்தானது.

Close