தஞ்சையில் கருப்பு சட்டை அணிந்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும்,பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை  விரைவில் முடிக்கவும்,  இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் தமுமுகவினர் தமிழகமெங்கும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் .

இதனையடுத்து தஞ்சையிலும் தமுமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  .இதில் அஹமது ஹாஜா (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ,தமுமுக) தலைமை தாங்கினார் .M.காதர் மைதீன் (தலைமை கழக பேச்சாளர்),.பழ.இராசேந்திரன் (தமிழ் தேசிய பேரியக்கம்).வழக்கறிஞர் அ.நல்லதுரை (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள் .A.M.சித்திக் (தஞ்சை நகர பொறுப்பு குழு) நன்றியுரை ஆற்றினார்.இதில் ஆண்கள் ,பெண்கள் ,சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . 


        


Advertisement

Close