சென்னை விமான நிலையத்தில் ரேடார் பழுது….

Want create site? Find Free WordPress Themes and plugins.

BL01CHENNAIAIRPORT_1348281fசென்னை விமான நிலையத்தில் உள்ள ரேடார் பழுதானது. இதனால், சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
கன மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் டிசம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்பட்டது. வெள்ளம் வடிந்ததால் கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், 3 ரேடார் கருவிகளில் 2 ரேடார் பழுதானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காலையில் மும்பை, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானமும், சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு விமானமும் மோசமான வானிலை, ரேடார் பழுது ஆகிய காரணங்களால் பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
இதே போல் அடுத்தடுத்து தில்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சின், திருவனந்தபுரம், அகமதாபாத்தில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் நீண்ட நேரம் வானத்தில் வட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்கப்பட்டன.
விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author