அதிரை பெண்களுடைய பெயர், படம், விபரங்களுடன் உலா வரும் போலி முகநூல் ஐ.டி கள்!

facebook-feature

டந்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்பம் அதன் உச்சத்தில் சென்றுவிட்டது எனலாம். யாரை பார்த்தாலும் பேஸ்புக், வாட்ஸ் அப் என கற்றவர், கல்லாதவர் என அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையல்ல. இதில் பல நல்ல விஷயங்கள் இருப்பதற்கு ஈடாக தீமைகளும் இருக்கவே செய்கின்றது.

கடந்த வாரத்தில் நமது இஸ்லாமிய சகோதரர்கள் செய்த எண்ணிடங்கா வெள்ளா நிவாரண பணிகளை ஊடகங்கள் மறைக்க நினைத்தாலும் சமுக வலைத்தளங்கள் மூலமாக அனைவராலும் பரப்பட்டு அறியப்பட்டது. இது போன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் ஆதங்கங்களை, எண்ணிலடங்கா செய்திகளை பதிவதற்கு சமுக வலைதளங்கள் வழிவகை செய்கின்றன. இந்நிலையில் இதில் பலருடைய அறிமுகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

இதனால் பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் கயவர்களின் வலையில் பெண்கள் அதிகம் விழுகின்றனர். தற்போது முகநூலை திறந்தாலே PEOPLE YOU MAY KNOW என்று சில பெண்களின் படங்களுடன் ஐடி களை காட்டுகின்றது. அதனை திறந்து பார்த்தால் அதில் புகைப்படம், ஊர் அதிரை, படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி, பிறந்த நாள் என அனைத்து விபரங்களையும் பதிந்துள்ளனர். இதில் பல போலிகளும் சில உண்மையான ஐடிகளும் உள்ளன. பல இளைஞர்களும் சிறுவர்களும் இந்த ஐடி களுடன் நட்பு வட்டத்தில் இருப்பதுடன் அவர்களுடன் உரையாடுவதிலும் காலத்தை கடத்துகின்றனர்.

பல பள்ளி சிறுவர்கள் பள்ளிகளுக்கு செல்போனை எடுத்து வந்து அங்கும் தொடர்ந்து பேஸ்புக்கில் உள்ள பெண்களிடம் தவறாக சேட்டிங்க் செய்து வருகின்றனர். வீடு, பள்ளி என அனைத்து இடங்களிலும் இதே சிந்தனைகளில் அவர்கள் இருப்பதால் அவர்களின் கல்வி பாழாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதுபோன்று பெண்களை பொறுத்தவரை வீட்டில் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ள இணையதள வசதியை பெற்றோர்களின் எந்த கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக பயன்படுத்துகின்றனர். இதன் விளைவே நம் அதிரையில் கடந்த சில நாட்களாக நம் காதில் விழக்கூடிய கேவலமாக சம்பவங்களுக்கு காரணம்….

இனியாவது எச்சரிக்கையுடன் இருப்போம்….! இல்லையெனில் அந்த பெண்ணின் மானமும் அந்த குடும்பத்தின் மானமும் கப்பலேறி விடும்!!!!

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (ஆசிரியர்-அதிரை பிறை)

Close