மக்கள் நேர்காணல் முகாம்!

பட்டுக்கோட்டை வட்டம் குறிச்சி சரகம் யுவாவிடுதியில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது. 

முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம். இந்திராகாந்தி முதியோர் உதவி திட்டம், உதவித் தொகை திட்டம், இந்திராகாந்தி விதவை உதவித்திட்டம்  போன்ற மனுக்களுக்கு தகுதியுடைய நபர்கள் முன்னதாக பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த முகாமில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், பொது மக்களுக் கான ஆதார் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Close