அதிரையில் அனைத்து ATM எந்திரங்களிலும் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

அதிரையில் முக்கிய வங்கிகளான இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளில் இன்று காலை முதல் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். 

அதிரையில் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினர். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு அதிரை வங்கிகள் இந்த சிக்கலை சரி செய்வார்களா! என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Close