அதிரை மேலத்தெருவில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் அள்ளப்படாத அவலம்! (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெரு தண்ணீர் டாங்கி அருகே அப்பகுதி மக்களால் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படுவது இல்லை.

ஆனால் இப்பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் அதிக காற்று வீசும் போது சாலைகளில் சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம். இதனால் அப்பகுதி மக்களுக்கு கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது.

அனால் இதை கண்டும் காணாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது போல் அதிரையில் ஒவ்வொரு தெருவிற்க்கு ஒரு குப்பை மேடு உள்ளது. இங்கும் குப்பைகள் நேரத்திற்க்கு அள்ளப்படுவது கிடையாது.

பொதுமக்கள் சுகாதாரம் கருதி இப்பகுதியில் குப்பைகள் விரைந்து அள்ளப்படுமா? இப்பகுதி மக்களின் கோரிக்கையை எற்று இப்பகுதியில் சிமெண்ட் குப்பை தொட்டி கட்டித் தரப்படுமா? பொதுமக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு அதிரை பேரூராட்சி செவி சாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Close