Advertisement

' />

அதிரையில் சாலைமறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது!(படங்கள் இணைப்பு)

கர்நாடகாவில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே அனைகட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டங்களாகும்.

எனவே இம்முயற்சியை கைவிடக்கோரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். 

அதிரை மெயின் ரோட்டில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிரை, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் கலந்துக்கொண்டனர். இதில் அதிரை சேர்மன் அஸ்லம், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரத்தின பிரகாஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அதிரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு அதிரை மெயின் ரோடு சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Close