அதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்து பரோட்டா!!!

அதிரையில் வருடா வருடம் ஸஃபர் மாதம் 10வது பிறையில் உணவகங்களால் கொத்து பரோட்டா
விற்பனை செய்வது வழக்கம். கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் கடைத் தெருவில்
உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று கொத்து பரோட்டா விற்பனை செய்யப்படுகிறது.

அதிரை மக்கள் பலரும் இந்த கொத்து பரோட்டாவை ஆசையுடன் வாங்கிச் செல்கின்றனர். அந்த பகுதியை
கடந்து செல்லும் போதெல்லாம் கொத்து சத்தம் காதை கிழிக்கிறது. கொத்து பரோட்டாவை
போடுவதை பார்க்கவே அங்கு ஒரு தனி கூட்டம் நிற்கிறது என்று சொல்லலாம். 

 

Advertisement

Close