அதிரையில் மீண்டும் பலத்த மழை! மீண்டும் சாலைகளை சூழ்ந்த மழை நீர்!

Adirai Salih - Rain In Adirai (7)

அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழையை அடுத்து கடந்த 4 நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வபோது தூரலாக இருந்து வந்தது. இந்நிலியயில் லுஹர் தொழுகைக்கு பிறகு பலத்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதில் சாலைகளில் ஓரளவு மழை நீர் வடிந்திருந்த நிலையில் மீண்டும் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. இந்த மழையால் பள்ளி மாணவர்கள் நனைந்துக்கொண்டும், குடை பிடித்துக்கொண்டும் பள்ளிகளுக்கு சென்றனர்.

தமிழக வட மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையை ஒட்டியுள்ள குமரிக் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Close