சீரழிந்து வரும் சின்ன மக்கா -01 (கஞ்சாவுக்கு அடிமையாகும் அதிரை இளைஞர்கள்)

Want create site? Find Free WordPress Themes and plugins.

திராம்பட்டினம், முன்பொரு காலத்தில் சின்ன மக்கா என மக்கள் பலராலும் பெருமையாக புகழப்பட்டு மதிக்கப்பட்டுவந்த ஓர் ஊர். பிற ஊர் மக்கள் அதிரை வாசி என்றாலே ஒரு தனி மரியாதை செலுத்துவார்கள். காரணம், அந்த கால அதிரை மக்களின் குணமும், செயல்களும் நல்லவையாகவே இருந்து வந்தன.kanja adirai

ஆனால் இன்றோ சொல்வதற்கு வாய் கூசும் அளவுக்கு பல கீழ்தரமான, கேவலமான காரியங்களை நமதூரை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். இந்த காரியங்களை குறிப்பிட்ட தெருவினரோ, குறிப்பிட்ட வயதினர்களோ, குறிப்பிட்ட மதத்தினர்கள் தான் செய்கின்றார்கள் என பிரிக்க முடியாது. அந்தவகையில் பல கேவலமான காரியங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவி ஊரே சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது எனலாம்.

அந்த வகையில் ஒரு ஊடகமாக எங்கள் மீதுள்ள சமுக சமுதாய பொறுப்பை உணர்ந்து நமதூர் மக்கள் சென்றுக்கொண்டிருக்கும் இந்த தவறான பாதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் (சீரழிந்து வரும் சின்ன மக்கா) என்னும் தொடரை இன்று முதல் துவங்கியுள்ளோம். இதில் நமதூர் மக்கள் அடிமையாகி வருகின்ற தீய பழக்கங்களை ஒவ்வொன்றாக தொடர் பதிவாக பதியவுள்ளோம்.

அந்தவகையில் இந்த தொடரின் முதல் கட்டுரையாக நாம் பார்க்க இருப்பது தான் நமதூர் இளைஞர்களை வழிகெடுத்து அவர்களின் சுயபுத்தியை மழுக்குகின்ற கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகுதல்.

கஞ்சா பற்றி சிறுகுறிப்பு:

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9– tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.

இந்த கஞ்சா பழக்கத்தால் அதிரை இளைஞர்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் அடிமையாகி வருகின்றனர். தவறான கூட்டாளிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமே என்று துவங்கப்படுவது தான் இந்த கஞ்சா பழக்கம். இதனை உட்கொண்ட உடனே அவர்கள் உடலிலும் மூளையிலும் ஒருவித மாற்றம் ஏற்ப்படுகின்றது. அது அவர்களுக்கு சுகம் தந்துவிடுவதால் அந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காக இந்த கஞ்சாவிற்கு அடிமையாகின்றனர்.

இப்படிப்பட்ட கஞ்சாவினை நமதூரை சேர்ந்த பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஏரிப்புறக்கரை அல்லது பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் இருந்து வாங்கி வந்து உபயோகிக்கின்றனர். இந்த கஞ்சாவினை சிகெரெட் இடையில் வைத்து புகைத்து, செய்தித்தாள்களுக்குள் வைத்து அதனை நுகர்ந்து பார்த்து போதையை அனுபவிக்கின்றனர். இதில் மிகவும் வேதனையளிக்கும் செயல் என்னவென்றால் பல பள்ளி மாணவர்கள் தங்கள் பாட புத்தகங்களின் தாள்களுக்கு இடையில் இந்த கஞ்சா தூளை வைத்து அதனை முகர்ந்து பார்த்து பள்ளியிலே இந்த கஞ்சா வினை பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக பல நல்ல மாணவர்களும் இதனால் வழிதவற வாய்ப்புள்ளது. கஞ்சா அடிப்பவர்களை மீட்டு கொண்டுவருவதற்கும் பல்வேறு காப்பகங்கள், ஆலோசனைகள், போதை மீட்பு உளவியலாளர்கள் உள்ளனர். உங்கள் வீட்டில் இது போன்று யாரேனும் இருந்து இந்த தீய பழக்கத்தில் இருந்து விடுபட தகுந்து உளவியல் ஆய்வாளர்களிடம் அழைத்து  சென்று தகுந்த மருத்துவ மனோதத்துவ சிகிச்சை அளித்து அவரை மீட்கலாம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author