அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்' />

அதிரை மக்களை மெய்சிலிர்க்க வைத்த வரலாற்று கண்காட்சி! (படங்கள் இணைப்பு)

PFI சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்கள் சங்கமம் மாநாடுகள் இம்மாதம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிராம்பட்டினத்தில் நமதூர் சித்திக் பள்ளி அருகாமையில் இதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றைய தினம் வரலாற்று கண்காட்சியும் நாளைய தினம் மாநாடும் நடைபெற உள்ளது. அந்த வகையில் இதற்க்கு முன்னதாக அதிரையில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும், மார்க்க அறிவு போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் நாளை நடைபெறும் மாநாட்டில் நடைபெற உள்ளது.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சித்தில் பள்ளி அருகே கண்காட்சி துவங்கியது இதனை  PFI
பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாமுதீன் தலைமை வகித்தார். SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்  முஹம்மது இல்யாஸ், PFI  தஞ்சை  பொது செயலாளர்  ஹாஜி சேக், PFI தின உரையை தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி வழங்கினார்.
இந்த கண்காட்சியில் ஏராளமான வரலாற்றை உணர்த்தும் பதாகைகள், பேனர்கள் அமைக்கப்பட்டன. மேலும் இதில் சிறுவர்  சிறுமிகளின் கைவன்னத்தில் உருவாக்கப்பட்ட பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் சிறுவர்கள், மாற்றுமத சகோதரர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை PFI அமைப்பினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close